There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
"ஸ்ரீ வித்யா உபாசனா - சுய-உணர்தல் மற்றும் ஆத்ம விடுதலைக்கான பேரண்ட பிரபஞ்ச ஆன்மீக அறிவியல். இது ஒரு தனிநபரின் மொத்த நல்வாழ்வை உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கை முறை."
"புனிதமான அதிகாரமளிக்கும் ஆத்ம பயணத்தில் உங்கள் தெய்வீக சக்தியின் சாத்தியத்தை கட்டவிழ்த்து விடுங்கள்"
Instructor: மனகுருநாதன் / ManagurunathanLanguage: தமிழ், Tamil
இது ஸ்ரீ வித்யா உபாசனை எனும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி / தாய் வாலை பரமேஸ்வரி உபாசனையின் முதல் படிநிலை தீட்க்ஷை
ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி உபாசனை தந்த்ர சாதனா "அனைத்து தந்திர தாந்த்ரீக வித்யாக்களின் சாரம்" என்றும் மிகவும் விரும்பப்படும் "ஸ்ரீ வித்யா" உபாசனையில் ஆதிசக்தி தெய்வீக அன்னையின் அருளைப் பெறுவதற்கான முதல் படிக்கல் என்றும் விவரிக்கப்படுகிறது.
குருகுல குருவின் மூலம் பெறும் அன்பர்களுக்கு எந்த நிபந்தனைகளும் இல்லை என்கிறது ஆகமங்கள். ஏனெனில் பூர்வ புண்ணிய பாக்கியத்தை பொறுத்தே ஸ்ரீ வித்யா உபாசன தீட்க்ஷை கிட்டும். அதுவும் குருவின் தயை இருந்தால் மட்டுமே.
வேறு எவருக்கும் தலை கீழ் நின்றாலும் உச்சிஷ்ட கணபதி சித்தி ஆகாது. இந்த ஒரு பூஜை மட்டும் முழுக்க முழுக்க பூர்வ புண்ணிய பாக்கியத்தை பொறுத்தே அமையும். அஷ்ட கர்மங்களும் ஆட இது மிக விசேஷமானது. மிக பெரிய வசியத்தை கொடுக்கும்.
உச்சிஷ்ட கணபதி உபாசகரை சுற்றி எந்நேரமும் மக்கள் சுற்றி கொண்டே இருப்பார்கள். இவர்கள் செய்யும் அனைத்து அஷ்டகர்மங்களும் சித்தி ஆகும். முக்காலம் உணரும் தன்மை உண்டாகும்.
அதர்வண வேதத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது. உதாரணமாக....
சூதாட்டத்தில் ஈடுபடுவோர் கூட இந்த உபாசனை செய்து மந்திரம் ஜெபித்து விளையாட வெற்றி கிடைக்கும்.
அனைவரும் வசியமாக...
ஆற்று நீரை எடுத்து வந்து 37 முறை ஜெபித்து பின்பு அந்த நீரால் முகம் கழுவி செல்ல காண்போர் அனைவரும் வசியமாவார்.
தீராத கஷ்டங்கள் தீர, சத்ருக்கள் வசியமாக, தன தான்யம் வந்து குவிய...
ஏதாவது தீராத கஷ்டம் வந்தால் வெள்ளெருக்கு, வேப்பம் குச்சி இதில் கணபதி பதுமை செய்து சிவப்பு சந்தனம் அல்லது செம்மலர் கொண்டு பூஜித்து அதை கல் பாத்திரத்தில் வைத்து பூமியில் ஒரு கையளவு கீழே புதைத்து அதன் மீது பகலும் இரவும் மந்திரம் ஜெபித்து வந்தால் ஒரு வாரத்தில் சகல பீடையும் ஒழியும், சத்ருக்கள் வசியமாவார். தன தான்யம் வந்து குவியும்.
இவரை கொண்டு ஆகாத காரியமில்லை மாந்த்ரீகருக்கு இவர் ஒன்றே போதும் இவரை வைத்தே சகல காரியங்களும் செய்யலாம்.
மேலும் உச்சிஷ்ட கணபதி மந்திரங்களை தகுந்த பயிற்சி செய்த சீடர்களுக்கும் தனது வாரிசுகளுக்கும் மட்டுமே கொடுக்க வேண்டும் பிறருக்கு கொடுக்கலாகாது என்கிறது "கணேச கல்ப சூத்திரம்" எனும் நூல்.
Learn live with top educators, chat with teachers and other attendees, and get your doubts cleared.
Our curriculum is designed by experts to make sure you get the best learning experience.
Interact and network with like-minded folks from various backgrounds in exclusive chat groups.
Stuck on something? Discuss it with your peers and the instructors in the inbuilt chat groups.
With the quizzes and live tests practice what you learned, and track your class performance.
Flaunt your skills with course certificates. You can showcase the certificates on LinkedIn with a click.